ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜன.2 ஆம் தேதி நடக்கும்.. மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை, புத்தகம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கனமழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்ச அன்பில் மகேஸ் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாமை சென்னை எழும்பூரில் துவக்கி வைத்த அன்பில் மகேஸ், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பெரிய அளவிற்கு கோரிக்கை வராததால் ஜனவரி 2ம் தேதி பள்ளி துவங்கிய பின் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
Comments