நுழைவுக்கட்டணம் என்ற பெயரில் ஆலம்பாடி வனத்துறை சோதனை சாவடியில் வசூல்?... வனத்துறை ஊழியர் பணம் வாங்கும் வீடியோ குறித்து விசாரிக்க கோரிக்கை

0 1141

ஒகேனக்கல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஆலம்பாடி வனத்துறை சோதனைச் சாவடியில் நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூல் செய்யப்படுவதாக பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

விலங்கு வேட்டையை தடுக்கும் வகையில் வாகனங்களை சோதனையிடுவதற்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ள இச்சோதனை சாவடியில் பகல் நேரங்களில் ஒரு வாகனத்திற்கு 100 ரூபாய் வரையிலும், இரவு நேரத்தில் 500 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவ்வாறு வசூலிக்கும் பணத்திற்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments