இரு பெண்கள் கொலை காமுக இளைஞருக்கு தரமான மாவுக்கட்டு ..! தப்பி ஓடி வழுக்கி விழுந்தான்
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தோட்டத்துக்குச்சென்ற இரு பெண்களை கொலை செய்து காதை அறுத்து நகையை பறித்துச்சென்ற கொலைகார காமுகனை போலீசார் கைது செய்தனர்.
போலீசிடம் இருந்து தப்பி ஓடும் போது வழுக்கி விழுந்ததால் அவனது கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
கடலூர் மாவட்டத்தில் ஆடுகளை மேய்க்கச்சென்ற இடத்தில் மகாலட்சுமி என்ற 50 வயது பெண்ணின் காதை அறுத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அறிந்து உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!
டிசம்பர் 1ந்தேதி கடலூர் மாவட்டம், சமட்டிக்குப்பத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற போது ஒதியடிக்குப்பம் செல்லும் சாலையில் முந்திரி தோப்பில் கொலை செய்யப்பட்டு நகைகள் பறிக்கப்பட்டிருந்தது.
அவரது முகத்தை மண்ணுக்குள் வைத்து அழுத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. மகாலட்சுமியின் காதை அறுத்து நகைகளை பறித்துச்சென்ற இந்த கொலையாளியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண்மணி ஒருவர், பொன்னாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு செல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அந்த பெண்மணியை தேடினர்.
அப்போது அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அந்த பெண்மணியின் ஆடைகள் கலைக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
இத்தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அந்த பெண்மணியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன், அந்த பெண்மணி அணிந்திருந்த நகைகளை களவாடிச்சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருமூர்த்தி என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி கரும்பு வெட்டும் தொழிலுக்காக இந்த கிராமத்திற்கு வந்ததாகவும், அப்போது மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்ற 55 வயது பெண்மணியை பலாத்காரம் செய்து கொலை செய்து நகை பறித்ததாக அவன் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட இரண்டு பெண்களிடமும் கொள்ளையடித்த நகைகளை திருமூர்த்தி பண்ருட்டி அருகே ஒரு கடையில் அடகு வைத்துள்ளதாக தெரிவித்த நிலையில் அந்த நகைகளை மீட்டு மீண்டும் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி திருமூர்த்தி தப்பி ஓடியதாகவும், சாலை தடுப்பில் வைத்துள்ள கட்டையை ஏறி குதித்த போது கீழே விழுந்ததில் அவரது வலது கை மற்றும் வலது கால் இரண்டும் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவனை தூக்கிச்சென்று கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் திருமூர்த்திக்கு மாவு கட்டு போடப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Comments