மத்திய நிதியமைச்சர் தகுந்த நிதியளிப்பார் என நம்புகிறோம்: உதயநிதி
வெள்ள பாதிப்புகளை பார்வையிட செவ்வாயன்று தூத்துக்குடி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகுந்த நிதியை கொடுப்பார் என்று நம்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணம் வழங்கிய பின் பேட்டியளித்த அமைச்சர், வீடுகள் மற்றும் கால்நடைகளை இழந்தோர் தொடர்பான கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Comments