எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக - எடப்பாடி பழனிசாமி

0 743

சி.பி.சி.எல். நிறுவனத்தின் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல், வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த பெரிய வகை படகுகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், மீன்பிடி வலைக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிவாரணத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments