இல்லாதவர்களுடன் பகிர்ந்து கிறிஸ்துமஸை எளிமையாக கொண்டாடுமாறு போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்
கிறிஸ்துமஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறு போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாடிகன் தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிற்றுகிழமை பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், கிறிஸ்துமஸை கொண்டாடும் பொருட்டு தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்.
மாறாக, இல்லாதவர்களுடன் பகிர்ந்து கிறிஸ்துமஸை கொண்டாடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். காஸா மற்றும் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த போப் பிரான்சிஸ், மக்கள் மனதில் மனித நேயம் மேலோங்க இறைவனை பிராத்திப்பதாக தெரிவித்தார்.
Comments