நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்.. சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு

0 1226

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

இலங்கைத் தமிழரான இவர் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார்.

நடிகர் வடிவேலுடன் இணைந்து மருதமலை, வின்னர், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களில் போண்டா மணியின் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த போது வீட்டில் திடீரென மயங்கிய அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments