தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என ஜெய்சங்கர் திட்டவட்டம் மறு கன்னத்தைக் காட்டும் மனநிலையில் நாடு இல்லை -ஜெய்சங்கர்

0 873

தீவிரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு கன்னத்தில் அறைவாங்கி மறு கன்னத்தைக் காட்டும் மனநிலையில் நாடு இப்போது இல்லை என்று கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் மும்பைத் தாக்குதல், எல்லைத் தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

அதே போல் அமெரிக்காவில் இந்துக்களின் சுவாமிநாராயண் ஆலயம் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைக் கண்டனம் செய்த ஜெய்சங்கர், அமெரிக்கா விசாரணையை நடத்தி வருவதாக கூறினார்.

வன்முறை தீவிரவாதம் போன்றவற்றுக்கு ஒருபோதும் இந்தியாவில் இடமில்லை என்றும் ஜெய்சங்கர் திட்டவ
ட்டமாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments