நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவால் காலமானார்

0 1409

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 60. 1991ஆம் ஆண்டு நடிகர் பாக்யராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமாகி, நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் போண்டா மணி நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுடனான இவரது நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவில் பிரபலமாகின.

இலங்கை தமிழரான போண்டா மணி கடந்தாண்டு சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு போராடி மீண்டார். இருப்பினும் இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் வாரத்துக்கு 2 நாட்கள் வீதம் டயாலிசிஸ் சிகிச்சையும் எடுத்து வந்தார். நேற்று காலை டயாலிசிஸ் செய்து வீடு திரும்பிய போண்டா மணிக்கு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments