வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட கனிமொழி, எம்.பி., "எங்கள் ஊரை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த முன்னாள் கபடி வீரர்"
திருச்செந்தூர் அருகே மனத்தி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் எங்கள் ஊரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் கபடி வீரர் மனத்தி கணேசன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
கடம்பாகுளத்தில் ஏற்பட்ட உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குட்டித்தோட்டம் மற்றும் மணத்தி பகுதியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
தன்னிடம் வருத்தத்துடன் கோரிக்கை வைத்த கணேசனை சமாதானப்படுத்திய கனிமொழி, தைரியமாக இருங்கள் என ஆறுதல் கூறி, வெள்ள நீரை வடியவைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Comments