தூத்துக்குடியில் 50 டிராக்டர்களில் சுமார் 25 டன் கய்கறிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலிவு விலைக்கு அனுப்பி வைப்பு

0 736

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கும்பொருட்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் அனுப்பப்படும் காய்கறிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

தினந்தோறும் 50 டிராக்டர்கள் மூலம் சுமார் 25 டன் மதிப்புள்ள காய்கறிக்ள் விற்பனை செய்யப்படுகிறது.

திருச்செந்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக இதுவரை 70 டன் காய்கறிகள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கூலி வாங்கிக் கொண்டு டிராக்டர்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments