உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
தற்போது வேகமாக பரவி வரும் ஜேஎன்.1 கொரோனா திரிபு வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றும், இதனை எதிர்கொள்ள தற்போதுள்ள தடுப்பூசிகளே போதுமானது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தவிர இன்புளுயன்சா, குழந்தைகளை பாதிக்கும் சாதாரண நிமோனியா போன்ற சுவாச நோய்களும் தற்போது அதிகரித்து வருவதாகவும், தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, சுகாதார பழக்கங்கள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Comments