புதிய சிம் கார்டுகளை வழங்க பயோமெட்ரிக் விவரம் பெறுவது கட்டாயம்... வாடிக்கையாளர் ஒப்புதலின்றி விளம்பர மெசேஜ்களை அனுப்ப முடியாது

0 935

செல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் அல்லது புரொமோஷனல் குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டுமானால் அவர்களின் அனுமதி பெறுவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023-ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள இச்சட்டத்தில், முறைகேடான வகையில் சிம் கார்டு வாங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டப்படி, புதிய செல்ஃபோன் தொடர்பு பெறுபவர்களிடம் உறுதிப்படுத்தக் கூடிய பயோ மெட்ரிக் விவரங்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வரையில், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்களின் தகவல்களை இடைமறிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments