ஸ்பெயின் ராயல் தியேட்டரில் இந்த ஆண்டிற்கான எல் கோர்டோ என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் லாட்டரி தொடக்கம்

0 672

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டின் ராயல் தியேட்டரில் இந்த ஆண்டிற்கான எல் கோர்டோ என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் லாட்டரி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் விதவிதமான உடைகளில் உற்சாக நடனமாடியும் எல் கோர்டோ என்று முழக்கமிட்டவாறும் கலந்துக் கொண்டனர்.

ஒரே எண்ணில் பல டிக்கெட்டுகள் விற்கப்படுவதால் இதில் பலர் ஒரே மாதிரியான வெகுமதிகளை பெற வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். 1812 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லாட்டரி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

லாட்டரி தொடங்குவதற்கு முந்தைய மாதங்களில் இருந்தே டிக்கெட்டுகளை வாங்குவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments