வெள்ள பாதிப்பை கடும் இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிதி வழங்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் இயற்கை பேரிடர்களுக்காக தாங்கள் கேட்ட 1 லட்சத்து 27 ஆயிரத்து 655 கோடி நிவாரணத் தொகையில் மத்திய அரசு 4 புள்ளி 61 சதவீத தொகையை மட்டுமே வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதிலும் 2015 சென்னை வெள்ளத்தை மட்டுமே கடுமையான இயற்கை பாதிப்பு என அறிவித்து தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கியதாகவும், எஞ்சிய அனைத்து வெள்ள பாதிப்புகளுக்கும் மாநில பேரிடர் நிவாரணத் தொகையிலிருந்தே நிவாரணத் தொகையை விடுவித்ததாகவும் கூறியுள்ளது.
இம்முறை சென்னை பகுதிக்கு நிவாரணப் பணிக்காக 1500 கோடி ரூபாயும், நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு 500 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளதாகவும், அத்தொகையை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்குமாறும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Comments