அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய மாணவி குறித்து தகவல் அளிப்போருக்கு பத்தாயிரம் டாலர்கள் சன்மானம் எப்.பி.ஐ. அறிவிப்பு

0 786

அமெரிக்காவில், 4 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய மாணவி குறித்து தகவல் அளிப்போருக்கு பத்தாயிரம் டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என எப்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

நியூஜெர்சி மாநிலத்தில் தங்கியபடி படித்துவந்த மயுஷி பகத், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி, மாலை வெளியே சென்றபிறகு மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் ஆகியும் அவரை குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், FBI இணையதளத்தில், காணமல் போனவர்களில் மிகவும் தேடப்பட்டுவரும் நபர்களின் பட்டியலில் மயுஷியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments