அர்ஜென்டினா புதிய அதிபர் ஜேவியர் மிலேயை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டம்
அர்ஜென்டினாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜேவியர் மிலே கொண்டு வந்துள்ள பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை கண்டித்து அந்நாட்டு மக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
அமெரிக்க ஆதரவு வலதுசாரியான அதிபர் ஜேவியர் மிலே, பொருளாதார சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கல்வி, சுகாதாரம்,தொழிற் துறைக்கான பொது முதலீடுகள் உட்பட வளர்ச்சி திட்டங்களை குறைக்கும் நடைமுறையை தொடங்கினார்.
இதனால் அதிருப்தி அடைந்த இடதுசாரிகள், பொது மக்கள் ஆதரவுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் திரண்ட பொது மக்கள், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அடிவயிற்றில் கைவைப்பதாக கூறி உணவு பாத்திரங்களில் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Comments