இராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர்கள் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு: விவசாயிகள் வேதனை
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மானாவாரி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி அருகே அவர்தாண்டை, வேப்பங்குளம், நெடுங்குளம் உள்பட பல கிராமங்களில் சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டிருந்த மிளகாய், உளுந்து, நெல் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கமுதி அருகே காடமங்கலம், பொந்தம்புளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் நெல் மிளகாய், பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கி சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Comments