போலீசார் தாக்கியதில் கருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரம்..3 காவலர்களையும் நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம்

0 672

அமெரிக்காவில், போலீசார் தாக்கி கருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய 3 காவலர்களையும் நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2020ஆம் ஆண்டு, மார்ச் 3-ம் தேதி, மானுவல் எல்லிஸ் என்ற கருப்பின இளைஞருக்கும், ரோந்து போலீசார் 3 பேருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போலீசார் அவரது கழுத்தை நெறித்து, ஸ்டன் கன் மூலம் மார்பில் மின்சாரம் பாய்ச்சியதில், மானுவல் எல்லிஸ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவர் போலீசாரை தாக்க முயற்சிக்கவில்லை என பாதசாரிகள் கூறியதால், 3 போலீசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2 மாதங்களாக நடைபெற்ற விசாரணையில், வாஷிங்டன் நீதிமன்றம் 3 காவலர்களையும் நிரபராதிகள் என விடுவித்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments