பாலியல் புகாருக்கு ஆளான பிரிஜ் பூஷணின் நெருங்கிய நண்பர் வெற்றி... மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவிப்பு

0 1202

பாலியல் புகாருக்கு ஆளான பிரிஜ் பூஷணின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 

தலைவர் பதவியில் 12 ஆண்டுகள் இருந்த பிரிஜ் பூஷண் ஷரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்து வேண்டும் என்று வலியுறுத்தியும் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பேரில் பிரிஜ் பூஷன் பதவி விலகினார். இதையடுத்து நடந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய நண்பரான சஞ்சய் சிங்கும், அவரை எதிர்த்து காமன்வெல்த் தங்கம் வென்ற அனிதா ஷியோரனும் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 47 வாக்குகளில் சஞ்சய் சிங் 40 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 7 வாக்குகள் மட்டுமே பெற்று அனிதா தோல்வியடைந்தார்.  

பிரிஜ் பூஷணின் நண்பர் வெற்றி பெற்றிருப்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments