தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முக்கிய வணிக நகரங்களில் ஒன்றான ஏரலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்துமே துண்டிப்பு

0 828

தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரங்களில் ஒன்றான ஏரலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்துமே துண்டிக்கப்பட்டு அந்நகரமே தனித்தீவாக மாறியுள்ளது.

அங்குள்ள அரிசி ஆலை ஒன்றில் வெள்ளம் புகுந்ததில் ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளும் நெல் மூட்டைகளும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. ஏரலில் பல பகுதியில் தொடர்ந்து  வெள்ளம் சூழ்ந்துள்ளதால், தகவல் தொடர்பு, போக்குவரத்து, மின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

சேர்மன் கோவில் பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், எங்கெங்கிருந்தோ வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட லாரிகள் அங்கு கவிழ்ந்து கிடக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments