தூத்துக்குடியில் அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார் : முதலமைச்சர் ஸ்டாலின்
அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த முதலமைச்சர், வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் எட்டையபுரம் 3-வது கேட் மேம்பாலம் மற்றும் குறிஞ்சி நகர் போல்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Comments