சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு.
மேல்முறையீடு செய்யும் வகையில் சிறை தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாக, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு.
மேல்முறையீடு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், 30 நாட்களுக்கு பிறகு, நீதிமன்றத்தை நாடலாம் - நீதிபதி ஜெயச்சந்திரன்.
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், பொன்முடியும், அவரது மனைவியும் சிறை செல்ல மாட்டார்கள்.
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக பதவி இழப்பு ஏற்படுகிறது.
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார்.
தீர்ப்பின் நகலை, தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவை செயலாளர், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு.
தண்டனையை குறைக்குமாறு நீதிபதி ஜெயச்சந்திரனிடம் பொன்முடி கைக்கூப்பி கோரிக்கை விடுத்தார்.
வயதை கணக்கில் கொண்டு தண்டனையை குறைக்குமாறு, நீதிபதி ஜெயச்சந்திரனிடம் பொன்முடி மனைவி விசாலாட்சி கோரிக்கை.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டின்போது, தண்டனையை குறைக்குமாறு கோரலாம் - நீதிபதி ஜெயச்சந்திரன்.
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவான பொன்முடி, 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதன் மூலம், தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.
சிறை தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)இன் படி பதவி இழப்பை எதிர்கொள்வர்.
மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால், தண்டனை காலம் முடிந்த பின், அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
Comments