26 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் டெண்டர்.. ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

0 1044

ஒற்றை இருக்கை கொண்ட 22 ஜெட் விமானங்கள் மற்றும் 4 பயிற்சி விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் ஜெட் விமானங்களை இந்தியாவுக்கு சப்ளை செய்ய பிரான்ஸ் டெண்டர் அனுப்பியுள்ளது.

இந்தியக் கடற்படைக் கப்பல்களான விக்ராந்த் மற்றும் விக்ரமாதித்யாவில் இருந்து இயக்குவதற்கான ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

இதற்கான டெண்டரை பிரான்ஸ் அதிகாரிகள் டெல்லியில் கடற்படை அதிகாரிகளிடம் வழங்கினர்.வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனையை செய்து வரும் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு இதற்காக டெல்லிக்கு வந்துள்ளது.

ஒப்பந்தத்தின் விவரங்கள், விலைப்பட்டியல் போன்றவற்றை அவர்கள் வழங்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments