செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 6 ரோந்து கப்பல்கள் வாங்கும் இந்தியா. உள்நாட்டு நிறுவனத்துடன் ரூ.1,614 கோடிக்கு ஒப்பந்தம்

0 1011

பல்நோக்கு ட்ரோன்கள், AI திறன் மற்றும் ரிமோட் வாட்டர் ரெஸ்க்யூ கிராஃப்ட் லைஃப் பாய் ஆகியவற்றைக் கொண்ட 6 ரோந்துக் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை புதியதாக வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மசகான் டாக்யார்ட் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஆயிரத்து 614 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

பல உயர்-தொழில்நுட்ப மேம்பட்ட அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய இந்த ரோந்துக் கப்பல்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 4 கப்பல்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் எனவும், இது கடலோர காவல்படையின் திறனை மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments