செம்பூரில் உள்ள பெரிய குளத்தில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 25 கிராமங்களில் வெள்ளம் புகுந்து சுமார் 2,700 ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய நீர்நிலையான செம்பூர் பெரியகுளக்கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி விளைநிலங்களில் பாய்ந்ததில் 25 கிராமங்களில் சுமார் 2,700 ஏக்கர் நன்செய் நிலங்கள் நீரில் மூழ்கியது.
வெள்ள நீரால் தனித்தீவாக மாறிய நாசரேத் பேரூராட்சியில் உள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. திங்கட் கிழமை அன்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், மணல் மூட்டைகளை அடுக்கி நீர் வெளியேறுவதை தடுத்து, உடைப்பை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments