தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட 6 பேர் கொண்ட மத்திய குழு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மூத்த ராணுவ அதிகாரி கே.பி.சிங் தலைமையிலான 6 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் 3 குழுக்களாக பிரிந்து சென்று அவர்கள் சேதங்களை பார்வையிட்டனர்.
மத்தியக் குழுவின் ஆய்வுக்குப் பின் பேட்டியளித்த தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் ஆணையர் பிரகாஷ், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெள்ளச் சேதத்துக்கு ஐயாயிரம் கோடி வரை நிவாரண உதவி கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments