ராமர் கோயில் விழாவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வயது மூப்பு காரணமாக பங்கேற்கமாட்டார்கள் என கோயில் அறக்கட்டளை தகவல்

0 839

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி வயது மூப்பு காரணமாக பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

ராமர் கோயில் கட்டுவதற்கான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

அவர்கள் இருவரையும் வயதுமூப்பு காரணமாக விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் அறக்கட்டளை நிர்வாகி சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் 4 ஆயிரம் சந்நியாசிகளும் 2200 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments