தென் மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள், 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 741

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மற்றும் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments