6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பும், 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0 2726

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று மிக கனமழை முதல் அதிகனமழை வரையில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments