நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் உயரதிகாரிகள் நியமனம்

0 1563

நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

4 மாவட்டங்களிலும் பேரிடர் குழுக்களின் மீட்பு நடவடிக்கைகளைத் தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயரும் கண்காணித்து வருகிறார். 100 பேர் அடங்கிய 4 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், 230 பேர் அடங்கிய 9 தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்பு பணியில் உள்ளனர்.

4 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாருடன், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 350 காவலர்களும் மீட்பு பணியில் ஈடுபடுவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments