நெல்லையில் அதிகனமழை.. மண்டபம் மிதந்தாலும் வளைகாப்பை ஜோராக நடத்தி அசத்திய கணவர்..! வெள்ளத்தில் சிக்கிய கார்கள்

0 2052

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடரும் அதிகனமழையால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இடைவிடாத மழை வெள்ளத்தில் சிக்கிய காரை இளைஞர்கள் ஒன்று கூடி காருக்குள் சிக்கிய 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பராபுரம் செல்லும் தரைப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

திருநெல்வேலி டவுன் சந்திப்பு பாளையங்கோட்டை கேடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், வண்ணார்பேட்டை முருகன் குறிச்சி பாளை பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது

இடைவிடாது வெளுத்து வாங்கும் மழையால் , செட்டிக்குளம். சாலையில் இடுப்பளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை , சமாதானபுரம் மற்றும் தியாகராஜர் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

நெல்லையில் வெளியே கனமழை கொட்டித்தீர்த்து ரோஸ் மஹால் என்ற மண்டபத்துக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையிலும், இளைஞர் ஒருவர் தனது அன்பு மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சியையாக நடத்தி முடித்தார்

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனாட்சி கார்டன், நித்திரவிளை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது

நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ் மடம் பாறைக்காமடை தெரு, ரயில்வே காலனி போன்ற பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அதனை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் கனமழையின் காரணமாக சானல் நிரம்பி வீடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

வட்டக்கோட்டையில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் முடங்கினர்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக லூர்தம்மாள் புரம் பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரை சுற்றியுள்ள சந்தையூர் கரையுடையோர் பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது செய்துங்கநல்லூரில் உள்ள ஆர்சி நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

தென்காசி மாவட்டத்திலும் தாழ்வான பகுதிகளில் வசிபோரை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகளுக்கு என்று பிரத்யேயகமாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments