முதல் முறையாக டெல்லி வந்துள்ள ஓமன் மன்னர் சுல்தான் ஹாய்தம் -பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் முதல் முறையாக 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, ஓமன் மன்னர் தாரிக் தலைமையில் இருதரப்பு உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு நேற்று நடந்தது.
அதில், இரு தரப்பு உறவை விரிவுபடுத்த 10 துறைகளில் தொலைநோக்கு திட்டத்திற்கு பிரதமர் மோடியும், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக்கும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதேபோல் நீண்டகாலமாக தீர்வு எட்டப்படாமல் இருந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் இரு தரப்பிற்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கூட்டு வர்த்தகத்திற்கு தேவையான சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை விரிவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமன் மன்னர் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருப்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Comments