அமெரிக்க அதிபர் தேர்தலில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி.. 6 நாட்களில் 42 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் பிரதிநிதியும் இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி, தனது ஆற்றல் ரகசியம் 'மக்கள் சக்தி' என்று கூறியுள்ளார்.
தனது அதிர்ஷ்டத்தின் ஸ்பெல்லிங் W-O-R-K என்று ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களைவிட இடையறாது மக்களை சந்தித்து வரும் அவர், கடந்த ஆறு நாட்களில் 42 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
அடுத்த வாரம் 38 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ள விவேக் ராமசாமி, நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் பணியாற்றுவதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments