நடுத்தர வயதுப்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது.. மகன் காதலித்து திருமணம் செய்ததால் நடுத்தெருவில் அவமதிப்பு

0 1144

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் நடுத்தரவயது பெண் ஆடைகள் களையப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் மற்றும் பாஜகவின் உண்மை அறியும் குழுவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து அவரை மானபங்கப்படுத்திய சம்பவம் குறித்து விசாரித்தனர்.

அந்தப் பெண்ணின் மகன் காதல் திருமணம் செய்ததால் பெண்வீட்டார் தாயை மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்து, இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை அரசியல்வாதிகள் தன்னார்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments