நார்த் டவுனில் மிதந்த 400 கார்கள்... பில்டிங் நடுங்கி வீக்காயிட்டாம்... 10 நாளாக பதறும் குடியிருப்பு வாசிகள்..! ஆட்டம் கண்ட வட சென்னையின் புதிய அடையாளம்

0 5918
நார்த் டவுனில் மிதந்த 400 கார்கள்... பில்டிங் நடுங்கி வீக்காயிட்டாம்... 10 நாளாக பதறும் குடியிருப்பு வாசிகள்..! ஆட்டம் கண்ட வட சென்னையின் புதிய அடையாளம்

பெரம்பூர் நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் மழை வெள்ளம் புகுந்து 400 கார்கள் பழுதடைந்த நிலையில் , 10 நாட்களாகியும் கார்ப்பார்க்கிங்கில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற இயலாமல் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.

வடசென்னையின், பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலை பகுதியில் உள்ள பின்னி மில் எதிர் புறம் பிரமாண்டமாக அமைந்துள்ளது நார்த் டவுன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் காரை இழந்து தவித்து நிற்கின்றனர்

1800 வீடுகளில் 5000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், மிக்ஜாம் புயலையொட்டி பெய்த மழையின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளம் மூழ்கியது.. அதில் இருந்த பல குடும்பங்கள் தப்பி மேலே உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்ததாகவும், அன்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த சுமார் 400 மேற்பட்ட கார்களும் நீரில் மூழ்கியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்

ஆரம்பத்தில் மூன்று நாட்களாக குடிக்க தண்ணீர், பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுற்ற நிலையில் கடந்த 7 ஆம் தேதி உறவினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த ஜேசிபி இயந்திரம், லாரிகள், மீட்பு படையினரின் படகுகள் மூலமாக வெளியேறியதாக கூறப்படுகின்றது

பத்து நாட்களை கடந்தும் அண்டர்கிரவுண்ட் பார்கிங்கில் இருந்த கார்கள் முழுவதும் மீட்கப்படவில்லை, மழைநீரை அகற்றும் பணிகள் நடைப்பெற்று வருகிறது..வீடு மற்றும் கார்களுக்கு இஎம்ஐ கட்டமுடியாமல் தவித்து வருவதாகவும், அடிக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்தின் சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேலும் குடியிருப்புகளில் பேஸ்மென்ட் வீக் ஆனதால் கட்டிடம் ஆடுவதாகவும், வீட்டில் இருக்கவே பயமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நார்த் டவுன் குடியிருப்பு நலச்சங்கத்தின் செயலாளர் விளக்கம் அளித்தார். கடந்த மழையை எதிர்கொள்வதற்காக 25 மோட்டார்களை தயார் செய்து வைத்து இருந்ததாகவும், ஆனால் ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வந்ததால் எங்களால் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டதாகவும், மறுசீரமைப்பு பணி நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர் வாடகைக்கு குடியிருக்கும் சிலர் வேண்டுமென்றே கெட்டபெயரை உருவாக்க வேண்டும் என செய்திகளை பரப்புவதாகவும், அங்குள்ள கட்டுமான நிறுவனங்களும் தண்ணீரிலே மிதந்ததாகவும் , அவர்கள் மீதும் வேண்டுமென்றெ பழியை சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments