செத்த பிறகும் ஏண்டா இப்படி? புதைக்கவிடாமல் அலையவிடறீங்க.. நச்சுன்னு குட்டு வைத்த கோர்ட்டு..! கண் தானம் செய்தவருக்கு கிடைத்த மரியாதை

0 2107
செத்த பிறகும் ஏண்டா இப்படி? புதைக்கவிடாமல் அலையவிடறீங்க.. நச்சுன்னு குட்டு வைத்த கோர்ட்டு..! கண் தானம் செய்தவருக்கு கிடைத்த மரியாதை

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்று நோயால் உயிரிழந்த நிலையில், கண் தானம் செய்த பெண்ணின் சடலத்தை கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் புதைக்கவிடாமல் தடுத்ததற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மதவழக்கப்படி ஊர் மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது.

புற்று நோய் உயிரை கொண்டு போனாலும், தான் இறப்புக்கு பின்னரும் கண்கள் பார்வை கொடுக்க வேண்டும் என்று கண் தானம் செய்த மேரி சுபா ரேவிதா என்கிற இந்த பெண்ணின் சடலத்தை புதைக்க இடம் கொடுக்காமல் அலைக்கழித்ததால் பாதிரியாருக்கு எதிராக நடந்த போராட்டம் தான் இவை..!

கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரது மனைவி மேரி சுபா ரேவிதா .இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேரி சுபா ரேவிதா புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

அவரது கண்கள் இரண்டும் தானமாக வழங்கபட்ட நிலையில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். உயிரிழந்த ரேவிதாவின் உறவினர் ஒருவருக்கும் பிள்ளைத்தோப்பு ஊர் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள நில தகராறை காரணம் காட்டி அவரது உடலை கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் புதைக்க ஊர் நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மேரி சுபா ரேவிதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவிலுக்கு சென்று ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயர் தரப்பிலிருந்து அவர்களுக்கு முறையான பதில் கிடைக்காததால் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர் அங்கும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அன்று மாலை அழிக்கால் பிள்ளை தோப்பு சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஊர் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் ரேவிதாவின் உடலை சின்னவிளை மீனவ கிராமத்தில் அடக்கம் செய்வதற்காக அவரது உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர் அங்கும் அடக்கம் செய்ய இடம் அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்டு அலக்கழிக்கப்பட்ட நிலையில் அவரது சடலத்தை வீட்டருகே உள்ள பட்டா நிலத்தில் அடக்கம் செய்யும் நிலை ஏற்ப்பட்டது.

இதனை தொடர்ந்து மீனவர் ஜெகன் தனது மனைவியின் உடலை கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் நல்லடக்கம் செய்ய உத்தரவிட கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், மேரி சுபா ரேவிதா உடலை 16-ம் தேதி காலை 10-மணியில் இருந்து 12-மணிக்குள் தோண்டி எடுத்து கிறிஸ்தவ முறைப்படி பிள்ளைத்தோப்பு ஊர் மயானத்தில் நல்லடக்கம் செய்ய மாவட்ட ஆட்சி தலைவர், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் பிள்ளைத்தோப்பு ஆலய பாதிரியார் மற்றும் ஊர் துணை தலைவருக்கு உத்தரவிட்டதோடு இறுதி சடங்கு முடிந்த பின் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட ரேவிதா உடல் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் கோட்டாச்சியர் சேதுராம லிங்கம், டிஎஸ்பி தங்கராமன் தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு திருப்பலியுடன் கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மகள் மற்றும் உறவினர்கள் உரிய தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments