காசி தமிழ்ச்சங்கமம் 2வது அமர்வை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... விழாக் கோலம் பூண்டுள்ள வாரணாசி நகரம்..!

0 1125
காசி தமிழ்ச்சங்கமம் 2வது அமர்வை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... விழாக் கோலம் பூண்டுள்ள வாரணாசி நகரம்..!

வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமத்தின் இரண்டாவது அமர்வை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதையொட்டி பலத்த பாதுகாப்பும் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாரணாசியில் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 37 நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

நமோ கங்கை நதிக்கரையில் இருந்து காசி தமிழ்ச்சங்கம விழாவைத் தொடங்கி வைக்க உள்ள மோடி, கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான புதிய ரயிலையும் காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு காசி நகரமே வண்ண மின் விளக்குகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க மலர்கள் மற்றும் மேளதாளங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments