வாள் ஏந்தி வம்பு ரவுடி பாட்டில் மணி கூட்டாளிகளுக்கு மாவுக்கட்டு..! ஓவர் அலும்பு உடம்புக்கு ஆகாது

0 1777

திருச்சி சமயபுரம் பகுதியில் ரவுடிகள் சிலர் கஞ்சா போதையில் ஒருவரை வாளால் தாக்கி கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியான நிலையில் சமயபுரம்  போலீசாருக்கு பயந்து ஓடிய இரு ரவுடிகளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

இப்பல்லாம் ஆம்பிள பசங்களா இருந்தாலும் இந்த கஞ்சா கும்பல் விடுவதில்லை. சிக்கினா சித்ரவதை தான்...!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கொம்பன் ஜெகன் திருச்சி மாவட்ட போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

ரவுடி ஜெகனின் கூட்டாளியான பாட்டில் மணி என்பவர் மீதும் கொலை அடிதடி கொள்ளை என இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

எங்கே போலீசார் தன்னையும் என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்று பயந்து பாட்டில் மணி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய நிலையில், திருச்சி மாவட்ட போலீசார் பாட்டில் மணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாட்டில் மணியின் கூட்டாளிகள் ஐந்து பேர் சேர்ந்து கஞ்சா போதையில், பயங்கர ஆயுதங்கள் வாள் மற்றும் அரிவாளுடன் காளி ராஜ் என்பவரை மிரட்டி ஆயுதத்தால் அடித்து ஆடைகளை களைய சொல்லி துன்புறுத்தும் வீடியோ வெளியானது.

பாட்டில் மணியின் கூட்டாளிகள் என்ற தைரியத்த்ஜில் காளி ராஜை கத்தியை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று அவரது செல்போன், பணத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த கஞ்சா கும்பலின் சித்ரவதையில் இருந்து தப்பிய காளிராஜ், திருச்சி மாவட்ட காவல்துறை தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவித்ததின் பேரில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் இச்சம்பவம் குறித்து லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டது கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ, அய்யனார் வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் என தெரிய வந்துள்ளது.

சமயபுரம் அடுத்துள்ள இருங்களூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் காளிராஜை அழைத்துச்சென்று அங்கு வாள் மற்றும் அரிவாளால் அடித்ததும், ஆடைகளை களைந்தும் கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது.

சமயபுரம் போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்ய முயன்ற போது இருவர் தப்பி ஓடிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த போலீசார் கவியரசன் யுவராஜ் அய்யனார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments