மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்தது நாட்டில் களேபரத்தை உருவாக்க லலித் ஜா முயற்சி: டெல்லி காவல்துறை தெரிவித்தனர்

0 1219

மக்களவைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளி லலித் ஜா நாட்டில் களேபரத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேலையில்லா திண்டாட்டம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காகவே நாடாளுமன்றத்துக்குள் புகுந்ததாக லலித் ஜா வாக்குமூலம் அளித்துள்ளபோதிலும், வெளிநாட்டு நிதி உதவியுடன் கூடிய மிகப்பெரிய சதி பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை மீண்டும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments