இருபெரும் திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி குஜராத் மாநிலம் சூரத்தில் நாளை இரண்டு மிகப்பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
புதிதாகக் கட்டப்பட்ட சூரத் வைர வியாபார வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார். உலகின் மிகப்பெரிய வர்த்தக அலுவலகமாக இது திகழ்கிறது. 80 ஆண்டுகளாக மிகப்பெரிய அலுவலக வளாகமாக உள்ள அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனை இது முறியடித்துள்ளது.
வைரங்களின் ஆராய்ச்சி மற்றும் வர்த்தகப் பணிகள் இங்கு நடைபெற உள்ளன. சுமார் 3,400 கோடி ரூபாய் செலவில் சுமார் 36 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய சுமார் 4500 அலுவலகங்கள் இந்த வளாகத்தில் இயங்கும் வசதியுடையது.
175 நாடுகளைச் சேர்ந்த 4200 வியாபாரிகள் இங்கு வைரங்களை கூர்தீட்டவும் பாலிஷ் செய்யவும் சூரத்துக்கு வருகின்றனர். அவர்களுக்கு இந்த புதிய வளாகம் மூலமாக சூரத்தில் வைரங்களின் வர்த்தகம் செய்ய ஒரு தளம் கிடைக்கும். சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் சர்வதேச விமான நிலையமாக புதிதாக மேம்படுத்தப்பட்ட சூரத் விமானநிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
Comments