சாம்சங் கேலக்சி செல்போன்கள் பயன்படுத்துவோருக்கு CERT கடும் எச்சரிக்கை..!
சாம்சங் கேலக்சி செல்போன்களைப் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசின் கணினி துறையான CERT துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் பாதுகாப்பு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி செல்போன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் போன்றவை ஹேக் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பலர் சரியான 'பின்' நம்பர் போட்டும் விரல் ரேகை பயன்படுத்தியும் தங்களது செல்போன் லாக் செய்யப்பட்டு தாங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
புகைப்படங்களை அழித்தல், அத்துமீறி ஹேக்கிங் செய்தல் போன்ற புகார்களும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க செல்போன் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments