அமெரிக்காவில் மூளை சாவடைந்த மாணவனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

0 1006

அமெரிக்காவில் மூளை சாவு அடைந்த நெல்லை மாணவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு சுற்றுலா சென்ற போது சகாய ஜெபாஸ் பிரஜோப் என்ற அந்த 12-ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி மூளைச்சாவு அடைந்தார். அமெரிக்காவிலேயே அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

அதன்பின் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் மூலக்காடு கிராமத்தில் உள்ள புனித ராயப்பர் தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

அப்போது உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அரசு ஆணைக்கு ஏற்ப பிரஜோப்பின் உடலுக்கு சேரன் மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments