பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து கூடிய ஒரு சில விநாடிகளிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியபோதும் கூச்சல் குழப்பம் நீடித்ததால், அடுத்த சில விநாடிகளில் அவையை திங்கள் கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்க நேரிட்டது.
மாநிலங்களையிலும் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பாதுகாப்பு மீறல் தொடர்பான விவாதிக்க எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதற்கு அவைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அனுமதி மறுத்தார்.
இதையடுத்து மாநிலங்களவை முதலில் 2 மணி வரையிலும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பி.க்களும் பதாகைகளை ஏந்திக்கொண்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் நாடாளுமன்ற வாயிலில் திரண்டவர்களை சந்தித்து சோனியா காந்தி தமது ஆதரவை தெரிவித்தார்.
Comments