சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்ற மேலும் 6 நாட்கள் வரை ஆகும் : அமைச்சர் உதயநிதி
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1702641002210408.jpg)
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்ற மேலும் 6 நாட்கள் வரை ஆகலாம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தோடு கலந்து கடலுக்குச் சென்ற எண்ணையை வரும் ஞாயிறுக்குள் அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், இப்பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.
பின்னர் பேட்டியளித்த உதயநிதி, கச்சா எண்ணையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Comments