கொலை வழக்கு விசாரணையின் போது பாலத்திலிருந்து குதித்து தப்ப முயன்ற ரவுடிக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு

0 1519

மதுரையில், போலீஸாரிடமிருந்து தப்ப முயன்று பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் ரவுடி ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. தத்தனேரியில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்குமார் கடந்த 8 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி வினோத்குமாரை போலீஸார் தேடி வந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தனிப்படையினர் கைது செய்து, அவர் கொடுத்த தகவலின்படியே அருள்தாஸ்புரத்திற்கு அவரை அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த ரத்தக்கரை படிந்த 2 கத்திகளை கைப்பற்றினர்.

அப்போது, வினோத்குமார் தப்பிக்கும் நோக்கில் அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவரது 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments