அஸ்ஸாமில் ராணுவ நிலையம் அருகே கையெறி குண்டு வீச்சு

0 785

அஸ்ஸாமின் ராணுவ நிலையம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜோர்ஹாட் என்ற இடத்தில் உள்ள ராணுவ நிலையத்தின் வாசலில் இந்த குண்டு வீசப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயமில்லை என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது கையால் தயாரிக்கப்பட்ட வெடிபொருளாகவும் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனிடையே இந்தத் தாக்குதலுக்கு உல்ஃபா அமைப்பின் மற்றொரு பிரிவான அசாம் சுதந்திர ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments