காதலிக்காக மதம் மாறியும் ஏமாற்றப்பட்ட காதலன் எடுத்த விபரீத முடிவு
சேலத்தில், காதலிக்காக மதம் மாறிய நிலையில், அவரோ ஊர் விட்டு ஊர் சென்று வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டு கர்ப்பமான தகவல் அறிந்து காதலன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், அதேப்பகுதியைச் சேர்ந்த மாற்று மத பெண்ணை காதலித்து, அவரது வேண்டுகோளுக்கிணங்க மதம் மாறி தனது பெயரையும் மாற்றிக் கொண்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் எந்த தகவலும் தெரிவிக்காமல் சேலத்திலிருந்து தருமபுரிக்கு இடம் பெயர்ந்ததோடு வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அண்மையில் காதலியின் புதிய செல்போன் நம்பரை கண்டுபிடித்து பேசிய போது, தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நகை தயாரிக்க பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து ஸ்ரீதர் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்
Comments