ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் காலிக்குடங்களுடன் பேரணி

0 681

ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கம் திட்டத்தை கைவிடக்கோரி ஏராளமான விவசாயிகள் காலிக்குடங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பழையபாளையத்திலிருந்து முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர்.

பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக செல்லும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்டங்களை சேர்ந்த சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் கசிவு நீர் விவசாயம் பாதிப்பும் குடிநீர் பிரச்சனையும் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேரணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாஜக விவசாய அணித்தலைவர் நாகராஜ் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.

ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கம் திட்டத்தை கைவிடக்கோரி ஏராளமான விவசாயிகள் காலிக்குடங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பழையபாளையத்திலிருந்து முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர்.

பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக செல்லும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்டங்களை சேர்ந்த சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் கசிவு நீர் விவசாயம் பாதிப்பும் குடிநீர் பிரச்சனையும் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேரணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாஜக விவசாய அணித்தலைவர் நாகராஜ் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments