கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்த ரேடிகோ கைதான் நிறுவன அதிபர்... பங்குகள் மதிப்பு ஓர் ஆண்டில் 50 சதவீதம் உயர்ந்தது

0 774

ஃபோர்ப்ஸ் இதழின் இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள மதுபான தயாரிப்பு நிறுவனமான ரேடிகோ கைதான் நிறுவனத்தின் அதிபர் லலித் கைதான், மது அருந்தாதவர் என தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட 80 வயது லலித் கைதானின் தந்தை, 1972 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த ராம்பூர் டிஸ்டில்லரி மற்றும் கெமிக்கல் கம்பெனியை விலைக்கு வாங்கினார்.

அவரும், அவரது மகன் லலித் கைதானும் இணைந்து நிறுவனத்தின் பெயரை மாற்றி, தற்போது மிகப்பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனமாக உருவாக்கி உள்ளதாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது. தற்போது ரேடிகோ கைதான் நிறுவனத்தின் வருவாய் 380 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments